#080112

நமது உறவுகள் உறுப்பினர்களாக இணைய முக்குலத்தோர் எழுச்சி கழகம் அன்போடு வரவேற்கிறது. இவன் கழக பணி குழு 9842177066, 9751150009

Monday, November 14, 2011

எங்கு தோன்றினோம்....



                                                      நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் "மனித இனத்தின் பயணம்" என்ற திட்டத்தின் கீழ் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பிச்சப்பன் அவர்களன் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள் மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிற்றூரில் முக்குலத்தோரின் ஒரு பிரிவான பிரமலைகள்ளர் இனத்தை சேர்ந்த விருமாண்டி ஆண்டித்தேவர்... என்பவரிடம் மரபியியல் ஆய்வு செய்த போது "எம்130 டி.என்.ஏ" கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒத்த மரபணு ஆப்பிரிக்க மக்களிடமும் ஆஸ்திரேலிய அப்ராஜீன் மக்களில் பாதிக்கு மேற்பட்டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் "எம்130 டி.என்.ஏ" இருப்பதாக டாக்டர்.பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்தார். மேலும் அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து 70,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்இந்தியாவில் பிரமலைக்கள்ளர்கள் குடியேறியதாக கூறுகின்றனர்

                                            Virumandi is elated with the news. "This is God’s gift to me, to be told that my roots go back to 70,000 years. They used to say that our village of 700 people had spawned from just three ancestors and I had often wondered from where and when they came. Now I have the answer — they came 70,000 years ago from Africa," Virumandi said.

நன்றி: விஜய் டிவி(நடந்தது என்ன), மதுரை காமராஜர் பல்கலைகழகம், தி ஹிந்து நாளிதழ்

http://www.hindu.com/2007/07/28/stories/2007072858821000.htm

முக்குலத்தோர் எழுச்சி கழகம்
மாமன்னர் சின்ன மருதுவின் "ஜம்பூதிவப் பிரகடனம்"



                                                ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலின் சுவரிலும் தென்னிந்திய தீபகற்பத்தில் வாழும் மக்களுக்காக ஒரு பிரகடனத்தை தீட்டினார். இந்தப் பிரகடனம் தான் முழு இந்தியாவிற்கே முதல் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்து எடுக்கப்பட்ட விடுதலைப் பிரகடனமாகும். இதற்கு முன்பு பல ஆங்கிலேயரை எதிர்த்தாலும் கூட்டு முயற்சியில் ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியது இதில்தானாம்!






தேசிய முக்கியத்தும் வாய்ந்த அந்த பிரகடனம் உயர்ந்த இலட்சியங்களை உள்ளடக்கியது.
ஆங்கிலக் கம்பெனியாருக்கு 16-6-1801ஆம் தேதி கிடைக்கப்பெற்றது

1. இதை யார் பார்த்தாலும் கவனமுடன் படிக்கவும்.

2. ஜம்பு (நாவல்) தீவிலும் ஜம்பு தீபகற்பத்திலும் வாழுகிற சகல சாதியினருக்கும், நாடுகளுக்கும், பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும், முசல்மான்களுக்கும் இந்த அறிவிப்புத் தரப்படுகிறது.

3. மேன்மை தங்கிய நவாப் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடம் கொடுத்து விதவை போலாகிவிட்டார். ஐரோப்பியர்கள் அவர்களது நம்பிக்கைகளுக்கு
மாறாக அவற்றை புறக்கணித்து, இந்த நாட்டை ஏமாற்றித் தமதாக்கிக் கொண்டதுடன், மக்களை நாய்களாகக் கருதி அதிகாரம் செலுத்துகின்றனர். மக்களிடையே ஒற்றுமை இல்லை. நட்பு இல்லை. ஐரோப்பியரின் போலி வேடத்தை அறியாமல் முன்யோசனையின்றி உங்கள் அரசை அவர்களின் காலடியில் வைத்தீர்கள். இந்த இழிபிறவிகளால் ஆளப்படும் இந்நாடுகளின் மக்கள் ஏழைகளானார்கள். அவர்களின் உணவு வெ ள்ளம் (நீர் ஆதாரம்) தான் என்றாயிற்று. அவர்கள் இவ்வாறு இன்னலுறுவது வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவு இல்லாதவர்களாயுள்ளனர். இப்படி ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதிலும் இதைப் போக்க சாவது எவ்வளவோ மேலானது என்பது உறுதி, அப்படிச் சாவைத் தழுவுகிறவனின் புகழ் சூரிய சந்திரர் உள்ளவும் வாழும். மேன்மை தங்கிய நவாபிற்கு ஆற்காட்டு சுபாவும் மற்றும் விசயமணத் திருமலை நாயக்கருக்கு கர்நாடகமும் தஞ்சாவூரும் முதல் கட்டமாகவும், மற்றவர்களுக்கு மற்ற சீமைகள் அடுத்த கட்டமாகவும், அந்தந்த நாட்டு வளமைகளையும் நெறிகளையும் மீறாமல் திரும்ப அளிக்கப்படும். இனி வருங்காலத்தில் ஒவ்வொருவரும் அவரவர் பரம்பரைப் பாத்தியதையே அடையலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐரோப்பியர் தம் பிழைப்புக்கு மட்டும் நவாப்பின் கீழ் பணிபுரிந்து, இடையீடற்ற உண்மையான மகிழ்ச்சி கொள்ளலாம். ஐரோப்பியர் ஆதிக்கம் ஒழிந்துவிடுமாதலால் இனி (ஐரோப்பியர்) தலையீடற்ற நவாபின் ஆட்சியில் கண்ணீர் சிந்தாத இன்ப வாழ்வு வாழலாம்.

4. அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளின் பெயர்கூட இல்லாதவாறு ஒழிக்க வேண்டி, அங்கங்கு பாளையங்களிலும், ஊர்களிலும் உள்ள ஒவ்வொருவரும் உங்களுக்குள் ஒன்றுபட்டு, ஆயுதமேந்திப் புறப்படுமாறு வேண்டப்படுகிறது. அப்போதுதான் ஏழைகளும், இல்லாதோரும் விமோசனம் பெறுவார்கள். எச்சில் வாழ்க்கையை விரும்பும் நாய்களைப் போல ஈனப் பிறவிகளின் வார்த்தைகளுக்கு அடிபணிகிற எவரேனும் இருப்பின் அவர்கள் கருவறுக்கப்பட வேண்டும். இந்த இழிபிறவிகள் (ஐரோப்பியர்) எவ்வளவு ஒன்றுபட்டும் தந்திர தன்மை கொண்டும் இந்த நாட்டை அடிமைப்படுத்திவிட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே வயல்களிலோ அல்லது வேறு துறைகளிலோ அரசின் பொது (சிவில்) அலுவலகங்களிலோ, இராணுவத்திலோ எங்கும் வேலை பார்ப்பவராயினும், பிராமணர்கள், சத்திரியோரில் மீசையுள்ள எவரும் இந்த இழி பிறவிகளின் இராணுவச் சிப்பாய்கள் எவராயிருப்பினும் ஆயுதம் ஏந்தத் தெரிந்த எவரும் தங்கள் துணிச்சலைக் காட்ட, இதோ உங்களுக்கு முதல் வாய்ப்பு வந்துவிட்டது. அந்த வாய்ப்பு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று கீழே விவரிக்கப்படுகிறது.

5. எங்கெல்லாம் அந்த இழி பிறவிகளைப் பார்க்க நேர்கிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். வேருடன் களைப்படும் வரை அவ்வாறு செயல்படுங்கள். இந்த இழி பிறவிகளிடம் பணிபுரிவோர் எவரும் (அவர்கள் மட்டும் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டு) சொர்க்கத்தை அடைந்துவிடப் போவதில்லை என்பதை நானறிவேன். இதனைக் கருத்தூன்றுங்கள் நிதானமாய் யோசியுங்கள். இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளாதவனின் மீசை, என் மறைவிடத்து மயிருக்குச் சமம்! அவன் உண்ணும் உணவு சத்தொழிந்து சுணுயற்றுப் போகட்டும். அவனது மனைவியும் குழந்தைகளும் இன்னொருத்தானுக்காகட்டும். அணு அவ்வழி பிறவிகளுக்குப் பிறந்தவைகளாக்க கருதப்படட்டும். எனவே ஐரோப்பியரால் இன்னும் இரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர்! இதைப் படிக்க சேர்கிற, இதன் சாராம்சத்தைக் கேட்க நேர்கிற எவரும் இதனை நண்பர்களுக்கு எழுதி எவ்வளவு பகிரங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு பகிரங்கப்படுத்தி எழுதி ஒட்டச் செய்வீர். அதைப் பெறுகிற நண்பர்களும் அதே மாதிரி (அதைப் படியெடுத்து) வெளியிடச் செய்து பிரச்சாரம் செய்திடச் செய்வீர்! மேலே சொன்னபடி எழுதவும். எழுதியதைச் சுற்றுக்கு விடவும் மறுக்கிறவர்கள கங்கை கரையில் காராம் பசுவைக் கொல்கிற பாவத்திற்கும், நரகத்திற்குப் போகிற, வேறு பாபங்களுக்குமஆன குற்றங்களைச் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள். இதை அனுசரிக்காத முசல்மான்கள் பன்றியின் இரத்தத்தைக் குடித்தவர்களாகக் கருதப்படுவார்கள்.இங்ஙனம்,

பேரரசர்களின் ஊழியன்
ஐரோப்பிய இழி பிறவிகளை ஒருபோதும் மன்னிக்காத
- மருது பாண்டியன் -

பெறுவோர்
சீரங்கத்தில் வாழும் அர்ச்சகர்கள், ஆன்றோர், அனைத்து பொது மக்கள் அனைவருக்கும் மருதுபாண்டியன் மேலே கண்டவர்களின் பாதங்களில் வீழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் அரண்களையும், மண்கோட்டைகளையும், ஆலயங்களையும், தொழுகையிடங்களையும் கட்டியவர்கள் நம் மன்னர்களாயிருக்க, அந்த மன்னர்களும், மக்களும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதே இந்த இழி நிலையை மாற்ற ஏதாவது செய்ய வேண்டாமா? எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கவர்கள் நீங்கள் இந்தப் பணி வென்றிட உங்கள் நல்லாதரவை நல்குங்கள்! மேற்கண்டவை திருவரங்கம் அரங்கநாதர் கோயிலின் மதியில் ஒட்டப்பட்ட பிரகனத்தில் கண்ட வாசகங்களின் நகலாகும்.

ஆதாரம் - மருது பாண்டிய மன்னர்கள் மீ. மனோகரன்

முக்குலத்தோர் எழுச்சி கழகம்

Friday, November 11, 2011

தினகரன் ஜெய் - குறும்பட இயக்குநர்:

 மருதிருவர் ஆவணப்படம் 

விடுதலைப் போராட்டக்களத்தில் வெள்ளையனை எதிர்த்து தூக்குமேடை கண்ட வீரத்தமிழர்களான சின்னமருது, பெரியமருது சகோதரர்களைப் பற்றி "மருதிருவர்" எனும் விவரணப்படத்தையும், குற்றப் பழங்குடிகள் சட்டம் பற்றி "ரேகை" எனும் விவரணப்படத்தையும் எடுத்து சமூகச் சிந்தனையாளர்களையும் குறும்பட ஆர்வலர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறார் தினகரன் ஜெய். இவர் இயக்கிய "ரேகை" விவரணப் படம் அண்மையில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வரவேற்பு இவரை மக்கள் தொலைக்காட்சிக்காக 52வாரங்கள் 52விவரணப்படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தந்திருக்கிறது. அனைத்தும் தென்னிந்திய வரலாறு தொடர்பானவை என்பதுதான் நமக்குச் சிறப்புச் செய்தி.





தினகரன் ஜெய் இயக்கிய குறும்படங்களைப் பற்றி...

இவர் இயக்கிய இரண்டு விவரணப்படங்களுடன் தென்னிந்திய குறிப்பாக தமிழக விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையவை. இவர் இயக்கிய முதல் விவரணப்படம் "மருதிருவர்" மருது சகோதர்களான சின்னமருது, பெரியமருது ஆகியோரின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றையும் அவர்கள் கோயில்களுக்கு ஆற்றிய திருப்பணியையும் ஓவியங்களின் மூலமாகவும் ஆவணங்களின் ஊடாகவும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மருதிருவரின் வீரத்தையும் திருப்பணிகளையும் நினைவுகூறவும் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் இப்படம் பயன்படக்கூடும். அடுத்து இவர் இயக்கிய "ரேகை" வீரஞ்செறிந்த இந்திய மக்களை ஒடுக்க பிரிட்டீஷ் அரசு கொண்டுவந்த ரேகை சட்டத்தின் கொடூரத்தைப் பேசுகிறது இப்படம். "ஐரோப்பிய சர்வாதிகாரத்தின் ஆணவத்தையும் அதனால் சிதைந்த இந்திய மக்கள் அவலத்தையும் இப்படம் முன் வைக்கிறது எனும் அறிவிப்புடன் தொடங்கும் இவ்விவரணப்படம் நம்மை நம் வீரஞ்செறிந்த வரலாற்று காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. சாதியும் மதமும் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தன. எனவே ஏகாதிபத்தியம் அவர்களை ஒடுக்க முடிவு செய்தது. பிரான்சில் பிரெஞ்சுபரட்சி நடந்த போது பழங்குடியினரின் பங்களிப்பு அதில் அதிகமிருந்தது. எனவே அவர்களை ஒடுக்க முடிவு செய்து புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதைப்போலவே இந்தியப் பழங்குடி இனத்தவரை ஒடுக்க குற்றப் பழங்குடிகள் சட்டத்தைக் கொண்டுவந்து கொடுமை படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டம் (1911) பிறப்பிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் எதிரொலித்தது. நான்கு முறை இச்சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரத்தை கையகப்படுத்த இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பஞ்சாப், மும்பை, கல்கத்தா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இச்சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வந்தது. கள்ளர் மறவர் அகமுடையவர் என 200க்கும் மேற்பட்ட சாதியினர் குற்ற பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர். பிறமலைக்கள்ளர்கள் இச்சட்டத்தின் கீழ் அதிகமாக கொடுமைபடுத்தப்பட்டனர். இதில் 15,000 பேர் கண்காணிக்கப்பட்டு 33 பேர் குற்றவாளிகளாக தண்டனை பெற்றனர் என இச்சட்டத்தின் கொடூரத்தை உணர்த்துகிறது இப்படம்.

1920 மார்ச் 20இல் பெருங்காமநல்லூர் கள்ளர் இன பெரியவர்கள் ஒன்றுகூடி இந்தச் சட்டத்தை தங்கள் மீது நடைமுறைபடுத்தக்கூடாது என முறையிட்டனர். ஆனால், போல்சோ கள்ளர்களுக்கு எதிராக பிற சாதியினரை புகார் கொடுக்க தூண்டி விட்டது. பிறமலை கள்ளர்கள் ராதாரி சீட்டு வாங்கிக் கொண்டுதான் ஊரில் நடமாட வேண்டும். போலீசுக்கு பிடிக்காதவர்களும் இச்சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 1920 மார்ச் கடைசியில் ரேகை போலீஸ் உத்தரவிட்டது.

1920 ஏப்ரல் 3இல் இச்சட்டத்தை எதிர்த்து மக்கள் பெருங்காமநல்லூர் கலவரம் செய்தனர். இதை அறிந்த இங்கிலாந்து அரசு மக்களை கொடுமையாக ஒடுக்க முடிவு செய்தது. கிளர்ச்சி செய்த மக்கள் போலீசாரால் சுட்டுத்தள்ளப்பட்டனர். இதைக் கண்டித்து படையாச்சி, ஆதிதிராவிடர் என பல சாதியினரும் போராட்டம் செய்தனர். 'கட்டைவிரலை வெட்டிக்கொள், அல்லது சிறைக்குப் போ. ஆனால் ரேகை மட்டும் வைக்காதே!' என முத்துராமலிங்கத் தேவர் போராட்டம் செய்தார். வன்னியகுல சத்திரிய சபா நடத்திய ரேகை ஒழிப்பு சட்ட போராட்டம், செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை நடத்திய ரேகை எதிர்ப்புப் போராட்டம் எனப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. 1947 ஜீன் 05இல் ரேகைசட்டம் ரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு இரத்தம் சிந்தி பெறப்பட்ட சுதந்திரத்தை சாதியும் மதமும் சேர்ந்து இன்னொரு அடிமைதனத்துக்குள் சிறைப்படுத்தப் போகிறது என்பதை மறுக்கமுடியாது என எச்சரிக்கை செய்கிறது இப்படம். குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை வரலாற்றில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சமூகப் பொறுப்புடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Thursday, November 10, 2011

வெள்ளையத்தேவன்

                               சேதுபதி சமஸ்தானத்திற்கு உட்பட்டது சாயல்குடி என்ற கிராமம். இதன் தலைவர் மங்களத்தேவர். சிற்றரசர்களுக்குரிய அத்தனை சிறப்பகளையும் வீரத்தையும் கொண்டவர். இவருடைய மகன் தான் வெள்ளையத்தேவன் என்கிறார்கள்.
                               எட்டயபுரம் மன்னர் தனக்கு அளித்து வந்த இன்னல்களைக் எடுத்துக் கூறி, கட்டபொம்மன் மங்களத்தேவரிடம் உதவி கேட்டு வந்தான். “உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்னாமல் உதவுவது நம் பண்பாடு’ என்ற நெறியில், அவருக்கு உதவ தன் மகன் வெள்ளையத்தேவனை அனுப்பியதாக ஒரு செய்தி கூறுகிறது. தந்தையின் ஆணைப்படி தனயன் வெள்ளையத் தேவன் கட்டபொம்மனுக்கு உதவ வந்ததாகவும், வந்த இடத்தில் வெள்ளையத்தேவனின் வீரம் கண்டு, அவனையே தன் படையில் தலைமைத் தளபதியாக நியமித்துக்கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இன்னொரு கட்டுக் கதையும் உண்டு. சிறுவயதில் கட்டபொம்மன் தன் தந்தையுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனதாகவும் அங்கு கண்டெடுக்கப்பட்ட குழந்தையை அரண்மனையில் வைத்து வளர்த்ததாகவும், அக்குழந்தைதான் பிற்காலத்தில் வெள்ளையத்தேவனாக வளர்ந்து, படைத் தளபதி அளவிற்கு உயர்ந்ததாகவும் ஒரு கதை வழக்கில் உண்டு. அந்த செஞ்சோற்றுக் கடனுக்காகத்தான் இறுதிவரை கட்டபொம்மனோடு இருந்து வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்ததாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.
                               வெள்ளையத்தேவன் பிறப்பிலேயே வீரம் கொண்டவன். இளம் வயது முதல் வேல் சண்டையில் அதிக ஈடுபாடு கொண்டவன். அவன் போருக்குப் போகும் முன்சேவல்போர் நடத்துவானாம். அதில் அவன் சேவல் வெற்றி பெற்றால் போரில் வெள்ளையத்தேவனை யாராலும் வெல்ல முடியாது. எந்த போரிலும் தோற்காத அவனது சேவல் அன்று நடந்த சண்டையில் தோற்றதால்தான் வெள்ளையருக்கு எதிராக நடந்த போருக்குப் போகாவிடாமல் அவன் மனைவி வெள்ளையம்மாள் தடுத்திருக்கிறாள். “”போகாதே போகாதே என் கணவா…. பொல்லாத சொப்பனம் தானும் கண்டேன்” என்ற ஒப்பாரிப்பாடல் இடம் பெற்றுள்ள நாட்டார் பாடலில் இச்செய்தியுள்ளது. “பகதூர் வெள்ளை’ என்ற பெயரில் உள்ள நாட்டுப்பாடலிலும் இந்த ஒப்பாரிப்பாடல் உள்ளது.
தேசிங்கு ராஜனின் பஞ்சக் கல்யாணி குதிரை போன்றதுதான் வெள்ளையத்தேவனின் குதிரையும்.“ஒட்டப்பிடாரம் வழிதனிலே, ஓடி வருதாம் பேயக்குதிரை…” என்று அந்தக் குதிரையின் வீரத்தைப் பேசாதவர்களே இல்லையாம்.
                             1799செப்டம்பர் 1-ஆம் தேதி. திருச்செந்தூரில் நடந்த ஆவணி மாதத் திருவிழாவிற்கு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் சென்ற சமயம். ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த கர்னல் பானர்மேன், பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டனர்.
                              பரங்கியர் படையோ பெரும்படை பீரங்கிகள், துப்பாக்கிப் படைகள், குதிரைப் படைகள் என்று ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து குவித்திருந்தான் ஆங்கிலேயன். பாஞ்சாலங்குறிச்சியில் இருந்ததோ மரபு ரீதியான ஆயுதம் தாங்கிய ஆயிரம் வீரர்கள்.என்றாலும் அஞ்சவில்லை தமிழ்ச்சிங்கங்கள். காரணம் அதற்குத் தலைமை தாங்கியது தலைமைத் தளபதி வெள்ளையத் தேவன். எதிரிகள் படையை அவன் தாக்கியதைக் கண்டு பரங்கியர் பயந்துபின்வாங்கினார்கள். பீரங்கிக்குண்டுகளிடமிருந்து கோட்டையைக் காக்க வெள்ளையத்தேவன் பட்ட பாட்டை எழுத்தில் எழுதமுடியாதாம். நூற்றுக்கணக்கான துப்பாக்கி வீரர்கள் அவன் மார்பை குறிவைத்தார்கள்.
                             ஆனால், எதிரிகளின் குண்டுகள் அவன் மார்பில் பாய்ந்தபோதும் விடாமல் தொடர்ந்து எதிரிகளை அவன் வாளுக்கு இரையாக்கிக்கொண்டே வந்தான்.செய்தி கேள்விப்பட்டு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வந்ததை அறிந்தான். அதுவரை மார்பிலே குண்டுகளைத் தாங்கி, குத்தப்பட்ட வேலையும் பொருட்படுத்தாது பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் பத்திரமாக ஒப்படைத்தான். அடுத்தநொடி அந்தப் போர்க்களத்திலேயே வீரமரணம் எய்தினான் வெள்ளையத்தேவன்.
                             துப்பாக்கிக் குண்டுகளை முத்தமிட்டபோதும் இறுதிவரை மானத்தை இழக்காமல் மரணம் தொட்ட மாவீரன் வெள்ளையத்தேவன் பற்றிய வரலாறு அதிகம் எழுதாமல் போனது ஏனோ?
 
வீரமங்கை வேலுநாச்சியார்


பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
1730லஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.
1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை தோற்றுவிக்கப் பட்டது.அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர்.மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சியரபான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.
1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார்.சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்
1. 1728 – 1749 – முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 – 1772 – சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 – 1783 – வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1783 – 1801 – மருது பாண்டியர்கள் – பெரிய மருது (எ) வெள்ளை மருது மற்றும் சின்ன மருது
5. 1801 – 1829 – கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்


முக்குலத்தோர் எழுச்சி கழகம்
பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத்தேவர்

"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர்.
"சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர். பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார்.அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார்.1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.

தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர்.பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.

நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-

தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.
அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.
அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம்

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.
சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், அரசன் சண்முகனார், இராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், புலவர் அப்துல்காதிர் இராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.

உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.
அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.
மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர். தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.

நன்றி: தமிழ்மணி (தினமணி)

முக்குலத்தோர் எழுச்சி கழகம்
மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன்....
                                முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!!
சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.இவரை மட்டும் அல்ல முக்குலத்தோரையே அப்படித்தான் செய்கிறது.
                                மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன்.
                               இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் கலக்கிய மாவீரன் பூலித்தேவனின் சாதனைகள் பற்றி இன்னமும் சரித்திர ஆசிரியரகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழ் மறவன் பூலித்தேவனின் வரலாற்றுச் சுவடிகளில் சிலவற்றைக் இங்கு காண்போம்.
                              மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
                              இவ்வாறு பாளையங்களாக பிரிக்கப்பட்டதன் காரணம் பாண்டிய வமசத்தினர் மீண்டும் படைத் திரட்டி ஆட்சியைப் பிடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான். மதுரை, திருச்சி, கொங்குநாடு ஆகிய பகுதிகளில் தெலுங்கர்களையே நாயக்க மன்னன் நியமித்தான். திருநெவேலிச் சீமையில் தான் பெரும்பாலும் தமிழர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
                             மேலும் பாண்டிய வம்சத்தின் சிலரையும் பாளையக்காரர்களாக நியமித்து ஓரளவு வம்சாவழி எதிர்ப்பையும் அடக்கினான். மக்களிடத்து இவ்வாறு அதிகார வரம்பை பகிர்ந்தளித்ததால் மக்கள் எதிர்ப்பும் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நாயக்க அரசர்களின் ஆட்சி பலவீனமடைந்தது. இதனால் ஓரளவு சுய அதிகாரம் பெற்றிருந்த பளையக்காரர்கள் சிறிது சிறிதாக நாயக்கராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகினார்கள்.
                            இத்தனைய பாளையங்களில் ஒன்றுதான் நெற்கட்டான் செவ்வல் பாளையம் இந்திய விடுதலைப் போருக்கான முதல் குரல் இந்த பாளையத்திலிருந்து தான் ஒலித்தது. அந்த குரலுக்கு உயிர் கொடுத்தவரின் பெற்றோர்கள் பெயர் சித்திர புத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர்.
                           1-9-1715 ல் மாவீரன் பூலித்தேவர் இவர்களின் புதல்வராக தோன்றினார். இயற்பெயர், ‘காத்தப்ப பூலித்தேவர்’ என்பதாகும் ‘பூலித்தேவர்’ என்றும் ‘புலித்தேவர்’ என்றும் அழைக்கலாயினர் பூலித்தேவர் பிறந்த பொழுது அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். அதற்கு காரணம் பூலித்தேவரின் தந்தை சித்தி புத்திரத் தேவரின் நல்லாட்சிதான். அவருடைய ஆட்சி நல்ல முறையில் இருந்ததால்தான் மக்கள் அவர் மீது மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் தான் அவருக்கு பூலித்தேவர் பிறந்தபொழுது, மக்கள் மகிழ்வுற்றார்கள்.
                           சித்திரபுத்திரத் தேவர் எந்த பிரச்சினையும் இல்லாத அறுபத்து மூன்று ஆண்டுகள் மக்கள் போற்றும் வண்ணம் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாளைக்காரர்கள் மத்தயில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு சூழலில்தான் பூலித்தேவர் வளர்க்கப்பட்டார். சிறுவயதில் தாதிகளிடம் தன்னுடைய முன்னோர் பற்றிய வீர வரலாறுகளைக் கேட்டு மகிழ்ந்தார்.
                          மேலும் அந்த பிஞ்சு உள்ளத்தில் இறையுணர்வு பற்றிய தெளிவான விளக்கமும் பதிய வைக்கப்பட்டது. இவ்வாறு சிறுவயதில் ஊன்றப்பட்ட வீர உணர்ச்சியும், இறையுணர்வும் இறுதிவரை அவர் மனதில் இருந்தது. பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது.
                          சிறு வயதிலேயே முன்னோர் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டதால் தாமும் அவர்களைப்போல் பேரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உறுதி பூலித்தேவர் மனதில் இருந்தது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார் மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
                          பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம் புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பமுண்டு.
                        இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்வேர் என்றே அழைத்து வந்தனர் பூலித்தேவரைப் பார்த்தவுடன் அவர் ஒரு மாவீரன் என்று கூறுமளவிற்கு அவருடைய உடல்வாகு இருந்தது. அவரைப் பற்றிய ஒரு நாட்டு பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். சோதியைப் போல முகமிருக்கும், திண் தோள்களை உடையவர், பல்லோ பளபளக்கும், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.
                        காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள். பூலித்தேவரின் வயதுக்கு மீறிய ஆற்றலைக் கண்டுதான் அவருடைய பெற்றோர்கள் துணிந்து அவரை அத்தனை இளம் வயதில் மன்னராக்கினர். மன்னரைப்போலவே நெற்கட்டான் செவ்வல் மக்களும் இந்த முடிவை வரவேற்றார்கள்.
                       பின்னர் பூலித்வேருக்கு திருமண ஏற்டபாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார்தான். கயல்கண்ணி நல்ல அழகி மட்டுமல்ல, வீர விளையாட்டுக்கள் விளையாடுவதிலும் பூலித்தேவருக்கு உற்ற துணையாக விளங்கியவர். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவரின் இல்லற வாழ்ககை கண்ட அவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்சியடைந்தார்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவசச்சி, சித்திர புத்திர தேவன் மற்றும் சிஞானப் பாண்டியன் என்று மூன்று நன்மக்கள் பிறந்தனர்.
                       பூலித்தேவருக்கு பதினெட்டு வயதிருக்கும் பொழுது கிழக்குப் பளையங்களைச் சேர்ந்த இலவந்தூர் , ஈராட்சி ஆகியவற்றிற்க்கு ஏற்பட்ட எல்லைத் தகராறைத் தீர்த்து வைக்கச் சென்றிருந்தார். அச்சமயம் சிவகிரிப் பாளையத்தான் வந்து கால் நடைகளைக் கவர்ந்து சென்றான். இந்தச் செய்தியை ஒற்றன் மூலம் பூலித்தேவருக்கு கூறப்பட்டது. உடனே அவர் தளபதியான சவனத்தேவருக்கு செய்தி அனுப்பி சிவகிரிப் பளைக்காரணை தடுத்து நிறுத்துமாறு கட்டளையிட்டார்.
                       உடனே 150 வீர்களுடன்ட புறப்பட்டு நேராக சிவகிரிப் படைகளைத் தாக்குவதற்குச் சென்றார். பூலித்தேவர் போர்க்களத்தில் நுழைந்ததும் சிவகிரி படைகளின் எண்ணிக்கை கனிசமாக் குறைந்து கொண்டே வந்தது. இதனைக் கண்டு மேலும் பலர் களத்தை விட்டு ஓடினர். பூலித்தேவர் இறுதியில் வெற்றிகரமாக கால்டைகளை மீட்டுச் சென்றார். அக்காலப்போர் முறையின் முதற்கட்டமே வேற்று நாட்டின் கால்நடைகளைக் கவர்ந்து செல்வதுதான்.
                       போரில் வெற்றிபெற்றாலும் சவணத்தேவர் கூடலூர் வரை எதிரிகளை துரத்திச் சென்று போரிட்டார். அவர்களின் எல்லைக் கருகில் சென்று விட்டதால் எதிரிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது. ஆனாலும் மனம் தளராது போராடி பல பேரை சவணத்தேவர் கொன்று குவித்தார். ஆனால் களத்தில் அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். அதையும் பொருட்படுத்தாமல் அவர் போராடியதில், இறுதியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதற்கு விலையாக தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.


முக்குலத்தோர் எழுச்சி கழகம்

இமானுவேல் சேகரனை கொன்றது யார்?                                            
                                                காந்திஜி அந்நிய துணி எதிர்ப்பை மக்களிடம் கொண்டுசென்ற அதே கால கட்டத்தில் அரிஜன மக்களை ஆலயத்திற்குள் அனுமதி மறுக்கும் உயர் சாதியினர் செயலை கண்டித்து, "அரிஜனங்கள் ஆலய பிரவேசம் செய்ய வேண்டும், அதற்கு தேச பக்தர்கள் வழிவிடவேண்டும்" என்று முழங்கினார். அதனால் இந்தியா முழுவதும் தேச பக்தர்கள் அரிஜன மக்களை ஆலயத்திற்கும் கொண்டு செல்லும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
மதுரையில் தேசபக்தர் வைத்தியநாதையர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் அரிஜன மக்களை அழைத்துச் செல்ல எண்ணினார். இதனை அறிந்த சனாதனிகள் எதிர்க்க திட்டமிட்டனர். இந்த எதிப்பை சமாளிப்பதற்காக, வைத்தியநாத ஐயர், மதுரை எட்வர்டு ஹாலில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிற்கு திட்டமிட்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தேவரை இந்த போராட்டம் வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டினார். பசும்பொன் தேவரும் அதற்கு உறுதியளித்தார்.
                                                 இதை அறியாத சனாதனிகள், "மீனாட்சி கோவிலில் தரிசனங்களுடன் நுழைந்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும்" என்ற அச்சுறுத்தல் நோட்டிசை வெளியிட்டனர். இதற்கு பதிலாக தேவர், "ஸ்ரீ வைத்தியநாத ஐயர், மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் அரிஜனங்களை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறபோது சனாதனிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடிகள் கழகம் விளைவிக்கப் போவதாக கேள்விப்படுகிறேன். ஹரிஜனங்களை பயங்கரமான ஆயுதங்களால் தாக்கி, அங்கயற்கண்ணி ஆலயத்தை ரத்தக்கறை படியச் செய்யப்போவதாக எல்லாம் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. சனாதனிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ரவுடி கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாத ஐயர் அரிஜனங்களை அழைத்து வருகிறபோது அடியேனும் வருவேன்.ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்". என்றி துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்.
                                                 1939 ஜூலை 8 அன்று அரிஜன மக்களுடன் வைத்தியநாத ஐயர் சென்ற போது, அவருடன் பசும்பொன் தேவரும் சென்றார். ஆலய வாசலில் பசும்பொன் தேவரின் பற்றாளர்கள் எதற்கும் தயார் நிலையில் நின்றார்கள். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த சனாதனிகளும், அவர்களுடைய ரவுடிகளும் அந்த திசைப்பக்கமே தலை காட்டாமல் தப்பித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த அரிஜனங்கள் அங்கயற்கண்ணி மீனாட்சி தொழுது மகிழ்ந்தனர். இந்நிகழ்வின் மூலமே தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக சிங்கமே வந்துவிட்டது என்பதை எதிரிகள் உணர்ந்து கொண்டார்கள்.
1954 மார்ச் மாத்தில், அன்று "சென்னை ராஜதானி" என்று அழைக்கப்பட்ட தமிழக சட்ட மன்றத்தில், " அரிஜன முன்னேற்றம்" பற்றிய விவாதம் நடந்தி. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு மார்ச் 24 அன்று தேவர் பேசியது கவனத்தில் கொள்ளத்தக்கது ஆகும். அந்த உரையில்,
                                                  "ஆதி காலத்தில் தொழிலின் பேரால் ஜாதி வகுக்கப்பட்டது எனபது தான் தமிழ்ச் சான்றுகளும், சாஸ்திரங்களும் கூறுகின்ற உண்மை. அதற்கு உதாரணம் ஆண்களை அழைக்கின்ற காலத்தில் ஒரே பெயர் பலருக்கு இருக்கிறது என்பதன் காரமமாக, ஒரே பெயருடைய பலரை கூப்பிடும் பொழுது 'இன்ன தேவர்', ' இன்ன செட்டியார்', 'இன்ன ஐயர்' என்று பெயர் வாய்த்த தமிழ் பெரியோர்கள், பெண்களை அழைக்கும் போது அந்த பெயரின் கடைசியில் வால் வைத்து கூப்பிடாமல், அதாவது, 'இன்ன பிராமனத்தி', 'இன்ன செட்டிச்சி' என்று கூப்பிடாமல், அனைவரையும், 'இந்த அம்மாள்', 'அந்த அம்மாள்' என்று கூப்பிடுவதுதான் பழக்கமாக இருந்து வருகிறது. இது நீண்ட காலமாக இந்த நாட்டில் அனுஷ்டித்து வருகிற சித்தாந்தமாகும். அப்படி இருக்கும் போது ஆண்களுக்கு மாத்திரம் தொழிலின் பெயரை பின்னால் வைத்து அழைத்து, ஒரே பெயருடைய பல நபர்கள் தொழிலின் பெயரால் வித்தியாசப்படும் பொருட்டு செய்த சகாயமாகும்'. என்றும் மனிதனில் ஏற்ற தாழ்வுகள் இல்லை என்று குறிப்பிட்டு விட்டு, பின்வரும் உதாரணத்தையும் சொல்கிறார்; அடியேனுடைய உடம்பில் இரண்டு கைகள் இருக்கிறது.
                                                 ஒன்று வலது கரம்; இது உண்ணவும், என்னுடைய எண்ணத்தை எழுத்து மூலமாக வெளிப்படுததவும் பயன்படுகிறது. இன்னொன்று இடது கரம், உடம்பிலிருந்து வெளிவரும் அசுத்தங்களை அப்புறப்படுத்தி, உடம்பை தூய்மையாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது.
ஆனால், இறைவனையோ, பெரியவர்களையோ வணங்குகிறபோது, இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்துதான் வணங்க வேண்டும். இதுபோல அனைத்து சமுதாய மக்களும் இரண்டு கைகள் போல இணைந்தால் தான் சமுதாயத்தில் மக்கள் அனைவரும் செம்மையாக வாழ்த்திட முடியும்."
1962 ல் பொதுத் தேர்தல் வந்தது. 14.01.1962 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் தேவரும் இராஜாஜியும் ஒரே மேடையில் தோன்றினார்கள். "நீண்ட நாட்களாகிவிட்டன அடியேன் உங்களின் ஒருமிப்பு சக்தியில் நின்று பேசி" என்று தனது உறைய ஆரம்பித்த தேவரின் பேச்சில் உதிர்ந்த முத்துக்கள் பின்வருமாறு.
                                                  பதவியை நான் நினைத்தவனுமல்ல; அப்படி நினைத்திருந்தால் அது என்னை பொருத்தவரையில் மிக எளிது.
தேசத்திடம் பலனை எதிர் பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனில்லை நான். தேசத்திற்கு இயன்றவரை கொடுத்து சேவை செய்யும் கூட்டத்தைச் சேர்த்தவன் நான்.
                                                   நான் யாரையும் எவரையும் எதிரியாக கருதுபவனும் அல்ல. தவறுகளை கண்டிக்கிற என்னை யாரேனும் எதிரியாக பாவித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
                                                   நான் பேசுவது, எழுவது சிந்திப்பது சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவேயன்றி எனக்காக அல்ல.
நியாயத்திற்காக எதிர் நீச்சல் அடிப்பதால் காங்கிரசஸ்காரர்களின் எதிர்ப்பிற்கு நான் ஆளாகி இருக்கிறேன்.
                                                   18 ஆயிரம் ஓட்டுகளை மட்டும் கொண்ட என் வகுப்பினர் வாழும் தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுக்களை வாங்கும் நான் எப்படி வகுப்புவாதியாக இருக்கமுடியும்.
                                                    தம்மிடம் உள்ள வகுப்பு வாதத்தை மறைக்க பிறரை வகுப்புவாதி என்று கூறுவோரை மக்கள் தெரிந்து கொள்ளாமல் இல்லை.
எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் இரண்டு கண்களில் ஒன்று. இரு கண்களும் சம சக்தியோடு செயல்பட்டாலன்றி ஜனநாகயம் வலிமையோடு நடக்க முடியாது.
                                                    உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமை அல்லவா ஓட்டுபோடுவது. காசுக்காக காத்திருக்காமல் அவரவர் வசதி, சக்திக்கு தக்கவாறு இரண்டோ மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப்போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம்.
                                                    மேற்கண்டவாறு மணிக்கணக்கில் தனது பேச்சாற்றலால், மக்களின் உளங்களை தன் பால் ஈர்த்த தேவர் அவைகளின் கடைசி பேசும் அதுவே. ஆம் அதன் பின்னர் அந்த மனிதருள் மாணிக்கம் விண்ணகம் செல்லும் வரை எங்கும் பேசவில்லை.
                                                     பசும்பொன் தேவர் திருமணம் செய்து கொள்ள வில்லை என்பதும், அவருக்கு வாரிசு இல்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் எழுதி வைத்த இனாம் சாசனம் பற்றி எத்தனை பேர் அறிவர்?
                                                     1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர், திருச்சுழி பதிவாளரை, தம் இருப்பிடத்திற்கு அழைத்து ஓர் இனாம் சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில் ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்க் கொண்டு மீதி 16 பங்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில் பிறந்த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும் இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர் பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையில் இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த பெருந்தகையாளர் பசும்பொன் தேவர்.
                                                       பல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், தேவர் திருமகனாரின் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி இருந்து தங்களது கல்வி உணவு உடை தேவைகளை சிறப்பாக பெற்றிருக்கிறார்கள். தேவர் திருமகனாரின் வீட்டின் சமையல் கூடத்தில் அவருக்கு உணவு படைத்ததவரும் ஒரு தாழ்த்தப்பட்டவரே. அந்த அளவிற்கு தேவர் திருமகனார் ஏழை எளிய மக்களை நேசித்தவர். தீண்டாமை என்பது நாம் செய்யும் பாவம் என்ற மகாத்மா காந்தியடிகளின் சொல்லுக்கு ஏற்ப, நான் தமிழன், நான் இந்தியன் என்று முழக்கமிட்டவர் தேவர்.
                                                        பசும்பொன் தேவர் அரிஜனகள் மீது கொண்டிருந்த அன்பை, அதுவும் பசும்பொன் தேவரை எதிர்த்து அரசியல் நடத்திய காங்கிரஸ் கட்சியில் இருந்த அதுவும் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்த ஒருவர் சொல்லுவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
                                                        1952 ல் பசும்பொன் தேவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆர்.எஸ். ஆறுமுகம் சட்டமன்ற உறுபினராக இருந்தார். 1957 ல் நடந்த தேர்தலின் போது நாடாளுமன்ற இரட்டை தொகுதிக்கு பொதுத் தொகுதியில் பசும்பொன் தேவர் போட்டியிட்டார். தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் தேவர் தம் கட்சின் சார்பில் ஒருவரை நிறுத்தினார். பசும்பொன் தேவரை எதிர்த்தும், தாழ்த்தப்பட்டோருக்கான பசும்பொன் தேவரின் வேட்பாளரை எதிர்த்தும், காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியது. அப்படி தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் பசும்பொன் தேவரின் வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் கட்ச்யின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் ஆர்.எஸ். ஆறுமுகம். இந்த ஆறுமுகம் சொல்கிறார்; முதுகுளத்தூரை அடுத்துள்ள தெற்கு காக்கூரில் தேவர் பேசிக்கொண்டு இருந்த போது ஒருவர் வந்து ஒரு துண்டு சீட்டை கொடுத்தார். அதை தேவர் பார்த்துவிட்டு பையில் போட்டுக்கொண்டார்.
                                                   மற்றொருவர் இன்னொரு சீட்டைக் கொடுத்தார். படித்துவிட்டு கையில் வைத்துக் கொண்டே பேசினார். கூட்டம் முடியும் நேரத்தில் ஒருவர் எழுந்து, ஆர்.எஸ். ஆறுமுகத்தைப் பற்றி பேசுங்கள் என்றார். தேவர் நிதானமாகக் கூறினார்; 'என்னிடம் கொடுக்கப்பட்ட இரண்டு சீட்டுகளிலும் ஆர்,எஸ் ஆறுமுகத்தை பற்றி பேசுங்கள் என்று தான் இருந்தது. நீங்கள் வற்புறுத்துவதால் நான் அவரைப்பற்றி கூறுகிறேன். நான் ஆர்.எஸ் ஆறுமுகத்தை நன்கு அறிவேன். ஆர்.எஸ் என்றே அவரை அழைப்பேன். அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். நல்லவர். நல்ல பண்பாளர். சிறந்த நண்பர். நமது குடும்பர் இனத்தை சேர்ந்தவர். எனது சகோதரனை போன்றவர்' என்று கூறிவிட்டு தனது பேச்சை முடித்துவிட்டு போய்விட்டார். அதுவும் அரிஜன மக்கள் அவரை சூழ்ந்து நின்று கொண்டனர். நான் அவ்வூர் போவதாக திட்டமிட்டு இருந்தேன். அவ்வூர் மக்கள் எனக்காக மாலைகள் வாங்கி வைத்து இருந்தனர். அவற்றை எல்லாம் தேவருக்கே அணிந்து மகிழ்ந்தனர்.
சிறிதுநேரம் கழித்து நான் போனேன். நடந்ததை கூறினார்கள். எனக்கு போட மாலை இல்லையே என்று வருத்தப்பட்டார்கள். ' நீங்கள் வருத்தப்படவேண்டாம். எனக்காக வாங்கிவந்த மாலையை தேவருக்கு அணிவித்ததற்காக நான் ஆனந்தப்படுகிறேன். நான் எதிர் கட்சியிலிருந்தும் என்னை பற்றி அப்படிக் கூறிய அந்த மகானுக்கு மாலை அணிவித்ததே நமக்கு பெருமை' என நான் கூறிக்கொண்டிருந்த போதே, ஒரு தேவர் மாலையோடு ஓடிவந்தார். இது தேவருக்கு போட்ட மாலை. அவரிடமிருந்து தான் நான் வாங்கி வந்தேன். நீங்கள் வந்திருக்கிறீர்கள் . அகவே, உங்களுக்கு அதை சூடுகிறேன்' என்று சூதுவாது இல்லாமல் மாலை போட்டார். நானும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்.
                                                    ஆம்! அரிஜன வகுப்பை சேர்த்த பசும்பொன் தேவரை எதிர்த்து அரசியல் நடத்திய ஆர்.எஸ். ஆறுமுகம் சொல்லிய இந்த நிகழ்விலிருந்து பசும்பொன் தேவரின் சாதி பேதமற்ற உள்ளதை அறியலாம்.
தேவர் திருமகனார் தனது பெயருக்கு ஏற்ற படி தேவர் இனத்திற்கு மட்டும் உரியவர் என்று நினைத்திருந்தனர் சிலர். ஆனால் தேவர் திருமகன் தமிழகத்தின் தங்கம், எல்ல இனத்திற்கும் பொதுவானவர் என்பதை பின்வரும் சம்பவம் விளக்கும்.
                                                      இராமநாதபுரத்தில் ஜாதிக்கலவரம் மூண்ட போது மதுரை திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தேவர் திருமகன் அவர்கள், ஜெயராம் செட்டியார், எம்.எல்.சி. அவர்கள் காரில் கிளம்பிய போது, மதுரை கோரிப்பளையத்தில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ஓடிவந்து, நாடெங்கும் கலவரம் மூண்டுவிட்டது, இந்த நேரத்தில் உங்களை கைது செய்தால், விபரீத விளைவுகள் ஏற்படாதா? என்று கேட்டார். அப்போது தேவர், "இது அரசியல் சூழ்ச்சி, இதை புரிந்து கொள்ளாமல் யாரேனும் ஏழை அரிஜன மக்களை துன்புறுத்துவார்களேயானால், அவர்கள் என்னுடைய நெஞ்சைப் பிளந்து இரத்தத்தை குடிப்பதற்க்குச் சமமாகவே கருதுவேன். மேலும் எல்லோரும் அமைதி காக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டு காவல் துறை வேனில் ஏறினார்.
                                                  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் அகில பாரத பார்வர்டு ப்ளாக் கட்சியின் முன்னோடும் பிள்ளையாக விளங்கியவர். அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பல்வேறு தொழில்களின் நிமித்தம் வசித்து வந்த தமிழர்கள் பலரும் தேசிய ஆவேசத்துடன் சுபாஷின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருவதற்குக் காரணமாக இருந்தவர் பசும்பொன் தேவர். அந்த விதத்தில் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற தகுதிக்கு உரியவரானவரும்கூட. அவர் மீது தலித்துகளின் விரோதி என்னும் பழியைச் சுமத்தி, இம்மானுவேல் என்கிற கிறிஸ்தவ தலித்தைக் கொலை செய்யத் தூண்டினார் எனக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது அன்றைக்கு காமராஜர் தலைமையில் இருந்த தமிழக அரசு. பசும்பொன் தேவர் தண்டனை பெறுவதற்கு ஏற்ப அரசால் வழக்கு ஜோடிக்கப்பட்டது மட்டுமின்றி, முதுகுளத்தூரில் கலவரத்தை அடக்கும் சாக்கில் பல தேவர்களைக் காவல் துறை நிற்கவைத்துச் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சியும் நடந்தது. தேவர் சமூகத்தின் மீது மிகக் கொடிய அடக்குமுறையும் செலுத்தப்பட்டது. தேவர் தலித் மக்களிடையே பகைமை தோற்றுவிக்கப்பட்டது!
                                                   இம்மானுவேல் கிறிஸ்தவச் சர்ச்சுகளால் தூண்டப்பட்டு ஹிந்து தலித்துகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும் ஏவுகணையாகச் செயல்பட்டு, பலிகடாவானவர். பிற்காலத்தில் மீனாட்சிபுரம் இந்து தலித்துகள் முகமதியராக மாற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டதற்கு அது ஒரு முன்னுதாரணம்!
இதன் பின் விளைவாகத்தான் தென் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற உயர் தகுதியில் இருந்த பசும்பொன் தேவர் காமராஜர் ஆட்சியால் ஒரு கொலை வழக்குக் குற்றவாளியாகச் சிறைவைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். ஹிந்து தலித்துகளைத் தூண்டிவிட்டு சங்கடத்தில் ஆழ்த்திப் பிறகு அவர்களை ஒட்டுமொத்தமாகக் கிறிஸ்தவர்களாக மாற்றும் சதித் திட்டத்தை முறியடிக்க முற்பட்டதுதான் பசும்பொன் தேவர் செய்த மாபெரும் செயல்!
                                                  தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான ஜாதிக் கலவரமாக அது தடம் புரண்டு வருந்தத்தக்க விளைவுகளை உண்டாக்கிவிட்டது. இந்த அடிப்படை உண்மையை காமராஜர் அரசு சாமர்த்தியமாக மறைத்துவிட்டது. பசும்பொன் தேவர் தேவமாரின் ஜாதித் தலைவராகக் குறுக்கப்பட்டார்.
                                                   இவ்வளவுக்கும் காமராஜருக்கு முதல் முதலில் விருதுப்பட்டி என்கிற பிற்கால விருதுநகரின் நகராட்சித் தேர்தலில் நிற்பதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தவரே பசும்பொன் தேவர்தான்! ஒரு ஆட்டை வாங்கி காமராஜர் பெயரில் அதற்காக நகராட்சிக்கு வரி செலுத்தி அப்படியொரு தகுதியை காமராஜர் பெறச் செய்தார், பசும்பொன் தேவர்.
பிற்காலத்தில் காமராஜர் மாநில முதல்வர் பதவியில் அமரும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில் பசும்பொன் தேவர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்ச்சியை மிகவும் அலட்சியமான தொனியில் பகிரங்கப்படுத்தியதைக் காமராஜரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பதிலுக்குப் பசும்பொன் தேவரை வீழ்ச்சியடையச் செய்வதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்;இம்மானுவேல் கொல்லப்பட்டது அவருக்கு வசதியாகப் போயிற்று!

ஒரு தாழ்த்தப்பட்ட அன்பரின் ஐயா பற்றிய காணொளி:



                                                 ஆமாம்... இமானுவேல் சேகரனை கொன்றது யார்?
செட்டியார் இனத்தை சேர்ந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காரணத்தால், அப்பெண்ணின் உறவினர்களின் தூண்டுதலின் பெயரால் மறவர்களால் கொல்லப்பட்டவர்தான் இந்த இமானுவேல்... ஒரு கும்பக்கார பெண்ணிடம் (கரகாட்டம் ஆடுபவர்) தொடுப்பு வைத்திருந்ததாகவும் அதனால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைக்காகவும் இம்மானுவேல் சேகரனின் மனைவியே பரமக்குடி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக புகார் கொடுத்து இருந்திருக்கின்றார். காவல்நிலையப் புகார் ஆவணமாக உள்ளது. உண்மை வரலாற்றை அவர்கள் ஊர் பக்கம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் அங்கே இருந்த பிராமிணர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு அதற்கான தொகை தராமல்தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்ததும் பலருக்கு தெரிந்திருக்கின்றது. அவரது அண்ணன் துரைசாமி என்பவர் இமானுவேலுக்கு புகைப்படமே இல்லை, இப்பொழுது இருப்பது வரைந்த படமே என்கிறார். இராணுவத்தில் சேர்ந்திருக்கின்றாரே அந்த புகைப்படம் இருக்குமே என்று நாம் நமக்குள் மட்டுமே கேள்வி கேட்டுக்கொள்ள முடிகிறது. சிலர் அவர் இராணுவத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியில் வந்தவர் என்றும் உரைக்க கேட்கின்றோம். ஐம்பது ஆண்டுகள் கடந்து திடீரென்று நினைவு நாள் கொண்டாடப்படும் அரசியலும், புது புது வரலாற்று ஆக்கங்களும், அவற்றிற்கு மத சமூக அடையாளங்கள் அடிப்படையில் ஆதரித்து வரவேற்பதும் நமக்கு புரியாமல் இல்லை.
ஆக மொத்தத்தில் காமராஜ் நாடார் விதைத்த காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் கட்சி மோதல், மறவர்-பள்ளர் சண்டை என பெயர் சூட்டப்பட்டு சாதி சண்டையாக உருவெடுத்து இன்று தேவர்-தலித் சண்டையாக வளர்ந்து நிற்கிறது. ஒரே மண்ணில் அதுவும் வானம் பார்த்த பூமியில் இன்றும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இருக்கின்ற இரு சமூகங்களின் வாழ்வு திசை மாறி, தொழிற்சாலைகள் எதுவும் இன்றி, கருவேல் மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அருகில் உள்ள விருதுநகரும், தூத்துக்குடியும் எப்படி எதனால் முன்னேறியதோ ஆனால் முகவை மாவட்டத்தில் எந்த தொழிலும் அரசால் முன்னெடுக்கப்படவில்லை என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை. சில பல அரசு வேலைகளும், வெளிநாட்டுப் பயணங்களும் இவர்களுக்கு இன்று சாத்தியப்பட்டிருக்கின்றது. ஆனால் ஒற்றுமையைத் தான் காணோம்.
                                                 சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரிடம் ஒரு புகைப்படம் கூட இல்லை என்பது தான் உண்மை. அவரது அண்ணன் துரைச்சாமி என்பவர் தான் "அவனுக்கு ஒரு போட்டோ கூட கிடையாது, இப்போது இருப்பதெல்லாம் அனுமானத்தில் வரைந்தது தான்" என்று கூறியிருக்கின்றார். ஒரு புகைப்படம் கூட இல்லாத சமீபத்தில் வாழ்ந்த ஒருவரை தேசியத் தலைவர் என்றும், இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், மக்களுக்காக போராடி சிறை சென்றவர் என்றும், பலமுறை போராட்டங்கள் நடத்தியவர் என்றும் கதை கட்டுவதை, புத்தகம் வெளியிடுவது, குருபூஜை கொண்டாடுவது, சமுதாய விடிவெள்ளி என்றழைப்பது, போராளி என்று பரப்புரை செய்வது, தேவர் ஐயாவின் அடைமொழிகளை இவருக்கு சூடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுப்பது போன்றவற்றை அறிவிற் சிறந்த சான்றோர் எங்ஙனம் எடுத்துக் கொள்வர் என்பதும் நமக்கு புரியாமல் இல்லை. அரசியல் சூழ்ச்சிக்கு பலியான முகவை மக்கள் இன்று வரை அதற்கு பலியாடாய் பலியாவதற்கு தற்போது நடந்துள்ள பரமக்குடி கலவரம் ஒரு கொடூரமான எடுத்துக்காட்டு. வரலாற்றில் சுவடு இல்லை என்பதற்காக உழைக்கும் மக்கள் இப்படி துவேசத்தால் தூண்டப்பட்டு தவறான பாதையில் செல்வது சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கவே காரணமாகும் என்பதில் ஐயமில்லை.
                                                 இம்மண்ணின் மைந்தர் என்ற முறையில், மக்களாட்சி அடிப்படையில், ஒட்டு மொத்த நாட்டு முன்னேற்ற அடிப்படையில் எல்லோரும் முன்னேறுவோம்; உண்மை உணர்வோம்; சமூக துவேசம் தவிர்ப்போம்; பிறந்த பொன்னாடும், தகைமைசால் தாய்மொழியும், சமூக அமைதியையும் காப்போம்!

நன்றி: தேவர்TV


முக்குலத்தோர் எழுச்சி கழகம்

Tuesday, November 8, 2011

முக்குலத்தோரை தேவரினமாக அறிவிக்க கோரி ஐகோர்டில் வழக்கு

கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோரை தேவரினமாக அறிவிக்க கோரி வழக்கறிஞர் ஸ்டாலின் ஐகோர்டில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கு சார்பாக முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் மதுரை மாவட்டம் சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்.

குறுநில மன்னன்



குறுநில மன்னன் டைரக்டர் : R.முருகய்யா. இந்த படத்தின் டைட்டில் பாடல் மருதுபாண்டியகளின் வரலாற்றை பற்றிய பாடல்
kurunila mannan tamil movie

முருகன், சாந்தன், பேரறிவாளன்

முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் 8000 கருணை மனுக்கள் - இந்திய அரசு தகவல் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரின் சார்பிலும் 8000இற்கும் அதிகமான கருணை மனுக்கள் இந்திய மத்திய அரசுக்கும், இந்திய குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனையை நிறுத்துமாறு கோரியே 8000 இற்கும் அதிகமான கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிறிலங்காவில் உள்ள 801 அரசியல் கைதிகளின் சார்பிலும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மனிதஉரிமை அமைப்புகள், தமிழர் அமைப்புகள், அனைத்துலக மன்னிப்புச்சபை உறுப்பினர்கள் சார்பில் ஏராளமான கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அத்துடன், நன்கு அறியப்பட்ட பிரமுகர்களான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஸ்ணய்யர், சமூக சேவையாளர் பாபா அம்தே, மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹொஸ்பெற் சுரேஸ், உச்சநீதிமன்ற சட்டவாளர் இந்திரா ஜெய்சிங், அகாலி தள் தலைவர் சிம்ரஞ்ஜித்சிங் மான், கட்டடக்கலைஞர் லோறி பாக்கர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பஹுதீன், கேலிச்சித்திர வரைஞர் அபு ஆபிரகாம் உள்ளிட்ட பலரும் இந்தக் கருணை மனுக்களை அனுப்பியுள்ளனர்.தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் சட்டவாளர் மயில்சாமி உள்துறை அமைச்சிடம் விளக்கம் கோரியதன் அடிப்படையிலே இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முருகன், சாந்தன், பேரறிவாளன்







பேரறிவாளன், முருகன், சாந்தன், ஆகிய மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேதி 29 இடம் மதுரை ஸ்காட் ரோடு,
வி.கே.கவிக்குமார், பொதுச்செயலாளர்,முக்குலத்தோர்எழுச்சி கழகம்)


மதுரையில்: மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு




செப் 6,2011 மூக்கையாத்தேவரின் 32 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக மதுரை மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் U.A.செந்தில்ராஜ் B.E தலைமையில் புறநகர் மாவட்ட துணை அமைப்பாளர் பாண்டிக்குமார் மற்றும் முக்குலத்தோர் எழுச்சி கழக நிர்வாகிகள் தேவர்முருகன், தமிழன், முனிஸ்வரன், பாலசுப்ரமணி, பசும்>ொன் கிருஷ்ணா, பிரசாத்,அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://www.maalaimalar.com/2011/09/06152527/madurai-in-the-evening-mookaiy.html


குற்றப்பரம்பரைச் சட்டம் 1911
                                                        
                                                                     1920இல் தம் பிறப்பையே இழிவுப்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து உசிலம்பட்டி – பெருங்காமநல்லூர் பிறமலைக் கள்ளர் இன மக்கள் 16 பேர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையான கொடூரம் போலீஸ் குறிப்புகளில் மட்டுமே பதிவானது. செத்து விழுந்தவர்களில் மாயக்காள் என்கின்ற பொண்ணும் ஒருவர். சுட்ட போலீஸ்களில் எவரும் வெள்ளையர் இல்லை. எல்லாம் பிற சாதித் தமிழர்களே. பெருங்காமநல்லூரில் செத்து விழுந்தவர்களின் மார்பிலும், மாயக்காளின் பிறப்பு உறுப்பிலும் துப்பாக்கி முனை ‘பைனட்’ கத்தியைச் சொருகி, பூட்ஸ் காலால் நெஞ்சில் மிதித்தேறி நின்று கொக்கரித்தவர்கள் பிற சாதித் தமிழர்கள். இந்த தமிழன் மீது அந்தத் தமிழனுக்கு அத்தனை கோபம்.
                                  

                                                1920 மார்ச் 20இல் பெருங்காமநல்லூர் கள்ளர் இன பெரியவர்கள் ஒன்றுகூடி இந்தச் சட்டத்தை தங்கள் மீது நடைமுறைபடுத்தக்கூடாது என முறையிட்டனர். ஆனால், போல்சோ கள்ளர்களுக்கு எதிராக பிற சாதியினரை புகார் கொடுக்க தூண்டி விட்டது. பிறமலை கள்ளர்கள் ராதாரி சீட்டு வாங்கிக் கொண்டுதான் ஊரில் நடமாட வேண்டும். போலீசுக்கு பிடிக்காதவர்களும் இச்சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 1920 மார்ச் கடைசியில் ரேகை போலீஸ் உத்தரவிட்டது.

                                                 1920 ஏப்ரல் 3இல் இச்சட்டத்தை எதிர்த்து மக்கள் பெருங்காமநல்லூர் கலவரம் செய்தனர். இதை அறிந்த இங்கிலாந்து அரசு மக்களை கொடுமையாக ஒடுக்க முடிவு செய்தது. கிளர்ச்சி செய்த மக்கள் போலீசாரால் சுட்டுத்தள்ளப்பட்டனர். இதைக் கண்டித்து படையாச்சி, ஆதிதிராவிடர் என பல சாதியினரும் போராட்டம் செய்தனர். 'கட்டைவிரலை வெட்டிக்கொள், அல்லது சிறைக்குப் போ. ஆனால் ரேகை மட்டும் வைக்காதே!' என முத்துராமலிங்கத் தேவர் போராட்டம் செய்தார். வன்னியகுல சத்திரிய சபா நடத்திய ரேகை ஒழிப்பு சட்ட போராட்டம், செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை நடத்திய ரேகை எதிர்ப்புப் போராட்டம் எனப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. 1947 ஜீன் 05இல் ரேகைசட்டம் ரத்து செய்யப்பட்டது.



முக்குலத்தோர் எழுச்சி கழகம்

VRK.கவிக்குமார்  B.com.,LLB
பொதுச்செயலாளர் 
கைபேசி:9751150009

முக்குலத்தோர்ழுச்சிழகம்

 Mukkulathor  Ezhuchi  Kazhagam


#21/1A, சாந்தி ஷிபாணி பிளாசா,
ஆவின் எதிர்புறம்,சிவகங்கை ரோடு,
மதுரை -625020, தமிழர்நாடு.
மின்னஞ்சல்: mekparty@gmail.com
தொலைபேசி :  +91-98421770666 
இணையதளம்: http://www.mektamilnadu.blogspot.com