குற்றப்பரம்பரைச் சட்டம் 1911
1920இல் தம் பிறப்பையே இழிவுப்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து உசிலம்பட்டி – பெருங்காமநல்லூர் பிறமலைக் கள்ளர் இன மக்கள் 16 பேர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையான கொடூரம் போலீஸ் குறிப்புகளில் மட்டுமே பதிவானது. செத்து விழுந்தவர்களில் மாயக்காள் என்கின்ற பொண்ணும் ஒருவர். சுட்ட போலீஸ்களில் எவரும் வெள்ளையர் இல்லை. எல்லாம் பிற சாதித் தமிழர்களே. பெருங்காமநல்லூரில் செத்து விழுந்தவர்களின் மார்பிலும், மாயக்காளின் பிறப்பு உறுப்பிலும் துப்பாக்கி முனை ‘பைனட்’ கத்தியைச் சொருகி, பூட்ஸ் காலால் நெஞ்சில் மிதித்தேறி நின்று கொக்கரித்தவர்கள் பிற சாதித் தமிழர்கள். இந்த தமிழன் மீது அந்தத் தமிழனுக்கு அத்தனை கோபம்.
1920 மார்ச் 20இல் பெருங்காமநல்லூர் கள்ளர் இன பெரியவர்கள் ஒன்றுகூடி இந்தச் சட்டத்தை தங்கள் மீது நடைமுறைபடுத்தக்கூடாது என முறையிட்டனர். ஆனால், போல்சோ கள்ளர்களுக்கு எதிராக பிற சாதியினரை புகார் கொடுக்க தூண்டி விட்டது. பிறமலை கள்ளர்கள் ராதாரி சீட்டு வாங்கிக் கொண்டுதான் ஊரில் நடமாட வேண்டும். போலீசுக்கு பிடிக்காதவர்களும் இச்சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 1920 மார்ச் கடைசியில் ரேகை போலீஸ் உத்தரவிட்டது.
1920 ஏப்ரல் 3இல் இச்சட்டத்தை எதிர்த்து மக்கள் பெருங்காமநல்லூர் கலவரம் செய்தனர். இதை அறிந்த இங்கிலாந்து அரசு மக்களை கொடுமையாக ஒடுக்க முடிவு செய்தது. கிளர்ச்சி செய்த மக்கள் போலீசாரால் சுட்டுத்தள்ளப்பட்டனர். இதைக் கண்டித்து படையாச்சி, ஆதிதிராவிடர் என பல சாதியினரும் போராட்டம் செய்தனர். 'கட்டைவிரலை வெட்டிக்கொள், அல்லது சிறைக்குப் போ. ஆனால் ரேகை மட்டும் வைக்காதே!' என முத்துராமலிங்கத் தேவர் போராட்டம் செய்தார். வன்னியகுல சத்திரிய சபா நடத்திய ரேகை ஒழிப்பு சட்ட போராட்டம், செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை நடத்திய ரேகை எதிர்ப்புப் போராட்டம் எனப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. 1947 ஜீன் 05இல் ரேகைசட்டம் ரத்து செய்யப்பட்டது.
No comments:
Post a Comment