முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக முல்லை பெரியாறு அணையின் உரிமையை மீட்க மாபெரும் இரு சக்கர வாகன பேரணி
தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காமல் செயல்படும் கேரளா அரசை கண்டித்தும் தமிழர்களின் பிரச்சனையில் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலையில் இருந்து 18.12.11 காலை 10.00 மணிக்கு இரு சக்கர வாகன பேரணி தேனி நோக்கி
முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் மதுரை மாவட்ட துணை அமைப்பாளர் U.A.செந்தில்ராஜ் B.E தலைமையிலும் K.சக்திவேல் பாண்டியன் (புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர்) டி.கல்லுபட்டி M.சதீஷ் (திருமங்கலம் ஒன்றியம்) தேவர் முருகன் (திருபுவனம் ஒன்றிய செயலாளர்) முன்னிலையிலும் முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொது செயலாளர் V.K.கவிக்குமார் B.com.,LL.B அவர்கள் பேரணியை துவங்கி வைத்தார். சுமார் 30 வாகனங்களில் தேனி நோக்கி சென்றனர்.
No comments:
Post a Comment