#080112

நமது உறவுகள் உறுப்பினர்களாக இணைய முக்குலத்தோர் எழுச்சி கழகம் அன்போடு வரவேற்கிறது. இவன் கழக பணி குழு 9842177066, 9751150009

Thursday, March 22, 2012

இந்தியாவின் போர்க்குற்ற வீடியோ இலங்கையிடம் கிலியில் மன்மோகன் சிங்:
                                                 ஈழ போரின் இறுதிக்கட்டதில் ஒவ்வொரு நகர்வும் இந்தியாவின் கட்டளைக்கும் கண்ணசைவுக்கும்  உட்பட்டே நடந்தன. இதையெல்லாம் ஒன்று விடாமல் இலங்கை ராணுவத்தின் தானிப்பிரிவு ஒன்று படம் பிடித்திருக்கிறது. இந்தியா ராணுவத்தின் சீக்கிய சிப்பாய்கள் வன்னியில் போர்ப்புரிந்து மாண்டு போனது உட்பட இந்தியா இந்த போரில் நேரடியாக ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இலங்கையிடம் உள்ளன.இதுதான் நமது பிரதமரை இப்போது பயப்பட வைத்துள்ளது.
                                                மனித உரிமைகள் பேரவையில் ஆசிய கண்டத்துக்கான பிரதிநிதியாக இருக்கும் இந்தியா, ஐ.நா.வுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி மனித உரிமையைக் கண்காணிக்கும் நாடாக இருக்க வேண்டும். ஆனால், போருக்கு முழு ஆதரவு அளித்தது இந்தியா தான் என்று வெளிப்படையாக சிங்கள அதிகாரிகள் கூறிவருகின்றனர்.இலங்கைக்கு எதிராக இந்தியா தீவிரமாக காய் நகர்த்தினால்.... இந்த ஆதாரங்களை தானே நேரடியாக வெளியிடாமல் பின்னணியில் இருந்து இந்தியாவின் போர்க்குற்ற வீடியோகளை வெளியிட இலங்கை தயாராகிறது. இதை புலனாய்வு மூலம் உறுதி செய்து கொண்டதால் தான் இப்போது  இந்தியா இலங்கையிடம் தடுமாறுகிறது.     

முக்குலத்தோர் எழுச்சி கழகம்

No comments:

Post a Comment