உரிமையை பெற! உணர்வோடு இரு!
வீரமிகு சொந்தங்களே,
தலைவர்கள் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உன்னை காட்டி விலை பேசுவோர்க்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களை நீ சந்தித்துள்ளாய், இப்போது உனக்காக மானத்தோடும், மரியாதையோடும் நீயும் உன் சந்ததிகளும் வாழ்வதற்கு உனக்கு ஏற்பட்ட இந்த நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமல் தடுத்து நிறுத்துவது நமது கடமை,நாம் அனுபவித்த புறக்கணிப்பு நம் சந்ததிகளுக்கு விட்டு செல்லமாட்டோம் என்று உறுதிமொழி ஏற்போம். 60 ஆண்டுகளாக நாம் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற மாட்டோம் என்று நம்மை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு உணர வைப்போம். தேசிய மற்றும் திராவிட கட்சிகள் நம்மையும் நம் இன மக்களையும் பயன்படுத்தி அதில் ஆதாயம் அடைகிறார்கள். அதற்கு நம் இனத்தை சார்ந்தவர்களும் துணை நிற்கிறார்கள். இந்த அவல நிலை நம்மோடு போகட்டும். நம் இனத்திற்கான ஒரு அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிப்போம். நமக்கான உரிமையை பெற நாம் தான் போராட வேண்டும்.
நம் இன மக்களின் முன்னேற்றத்திற்காக நீ தினமும் ஒரு 2 மணிநேரம் ஒதுக்கு. இந்த நாட்டின் விடுதலையாக இருக்கட்டும், நாட்டின் வளர்ச்சி பாதையாக இருக்கட்டும் இன்னும் பல போராட்ட களங்களை சொல்லிக்கொண்டே போகலாம். எல்லா கால கட்டங்களிலும் நம் இன மக்கள் இல்லாத போராட்டங்களே இல்லை. உன் வருங்கால சந்ததி தெருவில் நின்று கையேந்தாமல் இருக்க நீ இப்பொழுது இருந்தே நம் இனத்திற்கான உரிமையை மீட்டெடுக்க புறப்படு. தவறான பல தகவல்களை கூறி நம் இனத்தை மற்ற சமுதாய மக்களிடம் இந்த நாட்டை தேசிய மற்றும் திராவிட கட்சிகளும் நம்மை எதிரியாக மற்ற சமுதாய மக்களிடம் பதிவு செய்கின்றன.
நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலை வாய்ப்பையும் தியாகம் செய்த நம்மை தவிர மற்ற அனைத்து சமுதாயத்தினரும் எல்லா வகையிலும் நம்மை பின்னுக்கு தள்ளிவிட்டு மேன்மையான நிலைக்கு சென்று விட்டார்கள். அதை பற்றி நீங்கள் ஒரு முறையாவது சிந்தீத்தீர்களா?.
கட்டிட தொழிலாளியாக, சுமை தூக்குவோராக, நடைபாதை வியாபாரம் செய்பவராக, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராக, ஹோட்டல்களில் கடைநிலை ஊழியராக, கைவண்டி இழுக்கும் தொழிலாளியாக, ஆட்டோ ஓட்டுனராக, சித்தாளாக, வீட்டு வேலை செய்பவராக, சமையல் வேலை செய்பவராக, மற்றும் நிரந்தரம் இல்லாத தொழிலாளியாக, இதுபோன்று ஒப்பந்தத்தின் அடிப்படையில் நம் இனத்தை சார்ந்த இளம் பெண்கள் குறைந்த ஊதியத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருட கூலியாக ஓய்வின்றி உழைக்கும் அவலநிலையில் உள்ளனர். இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட இந்த இனம் இன்று சொந்த நாட்டில் வேலை இல்லாமல் அல்லது மறுக்கப்பட்டு வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். அவர்கள் தங்கள் குடும்ப உறவுகளை பிரிந்து அங்கே அடிமைகளாக வேலை பார்க்கின்றனர்.
இந்த நிலைமையை மாற்ற சீரிய முயற்சியில் நீயும் பங்கு கொண்டு நமக்கான உரிமையை நாமே வென்றெடுப்போம்!
“நம்மை இன்றைய தலைமுறை வாழ்த்தட்டும்
நாளைய தலைமுறை நம்மை வணங்கட்டும்”
வி.கே.கவிக்குமார்
பொதுச்செயலாளர்
முக்குலத்தோர் எழுச்சி கழகம்